கந்தளாயில் ஆற்றில் இருந்து கைக்குண்டு மீட்பு
கந்தளாய்- யூனிட் 15 வயல் பகுதியில் உள்ள ரஜஎல பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று(31.8.2026) மாலை 4.00 மணியளவில், கந்தளாய் புதிய ரஜஎல பாலத்தின் கீழ் ஆற்றில் கைக்குண்டொன்று கிடப்பதை மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, அவர் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
மேலதிக விசாரணை
இதனைத் தொடர்ந்து, ரஜஎல பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கைக்குண்டு ஜேயார் (JR) வகையைச் சேர்ந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விடயங்கள் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், குறித்த கைக்குண்டு சர்தாபுர இராணுவத்தினரால் இன்று பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அவசர அவசரமாக பெலவத்தை தலைமையகத்துக்குள் முடக்கப்படும் அதிகாரங்கள்! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை