கொழும்பு தேவாலயத்தில் கைக்குண்டு:சந்தேக நபருக்கு விளக்கமறியல்
கொழும்பு பொரள்ளையில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைப்பற்றப்பட்ட கைக்குண்டு தொடர்பாக நடத்திய விசாரணைகளை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதனையடுத்து சந்தேக நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜேந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தை சேர்்நத இந்திக பெரேரா என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மேலும் மூன்று சந்தேக நபர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri