மத்திய கிழக்கு நெருக்கடி - இலங்கையை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்கு பரிமாற்ற அளவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் தனது செயல்பாட்டுத் திறனை விரிவுபடுத்தியுள்ளது.
இதன் மூலம் கிழக்கு-மேற்கு கப்பல் பாதையில் ஒரு பிரதான மாற்று மையமாக இந்த துறைமுகம் மாறியுள்ளது.
கப்பல் நிறுவனங்களின் தேவை
சர்வதேச கப்பல் நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த துறைமுகத்தில், வாகனங்களை ஏற்றி இறக்கும் முனையத்தின் கொள்ளளவு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொள்கலன் கையாளும் திறன் 30 சதவீதம் இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போரால் பாதிக்கப்பட்டுள்ள கப்பல் பாதைகளுக்குப் பதிலாக, நிலையான மற்றும் திறமையான தீர்வுகளைத் தேடும் சர்வதேச கப்பல் நிறுவனங்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
உலகளாவிய கப்பல் போக்குவரத்து முறைகளில் ஒரு கட்டமைப்பு மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாங்கள் காண்கிறோம்.
கொள்கலன் பரிமாற்றம்
இத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வேகம், திறன் மற்றும் வினைத்திறனை வலுப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம் என தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாகன மீள் ஏற்றுமதி மற்றும் கொள்கலன் பரிமாற்றம் என்பன முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்ச மட்டத்தை எட்டியுள்ளன.
இது உலகளாவிய விநியோக சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின் அளவை எடுத்துக்காட்டுவதோடு, உலக வர்த்தகத்தில் துறைமுகத்தின் வளர்ந்து வரும் மூலோபாய முக்கியத்துவத்தையும் பிரதிபலிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam
கல்யாண விஷயத்தில் நிலாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய சோழன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam