கணவனின் குற்றத்திற்கு உடந்தையான மனைவி: அம்பாந்தோட்டையில் சம்பவம்
அம்பாந்தோட்டையில் துப்பாக்கியால் சுட்டு , கூரிய ஆயுதத்தால் தாக்கிய குற்றம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபரும் குற்றத்திற்கு உதவிய சந்தேக நபரின் மனைவியும் தங்காலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (11.09.2023) ஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடிகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் காரில் பயணித்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு, கூரிய ஆயுதத்தால் தாக்கி காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கடந்த ஜூலை 11 ஆம் திகதி, அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொலிஸ் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடையவர் எனவும் பெண் சந்தேகநபர் 23 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, அம்பாந்தோட்டை மற்றும் ஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 கால்நடை திருட்டு சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேக நபருக்கு அம்பாந்தோட்டை மற்றும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தினால் 06 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றைய தினம் அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
