மீண்டும் ஒருமுறை சர்ச்சையை ஏற்படுத்திய பிரதான அரச மருத்துவமனை
இலங்கை மருத்துவமனைகளின் மீது தொடர்ந்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தெற்கின் பிரதான அரச மருத்துவமனை ஒன்றின் மீதும் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக காணப்படும் மருத்துவத்துறையில் காணப்படும் சில குறைபாடுகள் எம்மை தொடர்ந்தும் முகம் சுளிக்க வைக்கின்றன.
போதிய பராமரிப்பின்மையும், பாராமுகமாக செயற்பாடுகளும் அரச வைத்தியத்துறையின் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் விபரிக்க செய்கிறது.
அந்த வகையில் தென்னிலங்கையில் உள்ள ஒரு அரச வைத்தியசாலையின் கழிவறை தொடர்பான புகைப்படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பிரதான வைத்தியசாலை
நோய் நிலைமைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய வைத்தியசாலையின் இந்த நிலை கவலையளிக்கும் ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது.
தெற்கின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான, அம்பாந்தோட்டை தேசிய வைத்தியசாலையின் பராமரிப்பு தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பில் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தனது முகப்புத்தக பதிவில் இந்த விடயத்தை விபரித்துள்ளார்.
முகப்புத்தக பதிவு
''வருத்தத்துடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஒரு இலங்கையர் என்ற வகையில், இன்று அதிகாலை 1:30 மணியளவில் அம்பாந்தோட்டை தேசிய வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன்.
வார்டு எண் 04இல் உள்ள ஆண்கள் கழிவறையில் நான் கைப்பற்றிய உண்மையான காட்சிகள் கீழே உள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் இது மிகவும் மோசமான அனுபவமாக இருந்தது." என பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் வைத்தியத்துறை மீதான முறைகேடுகள், குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தப்படுகின்ற போதும் இவ்வாறான பாராமுக செயற்பாடுகள் பின்னடைவான போக்கையே பிரதிபலிக்கின்றன. வைத்தியசாலை கழிப்பறை என்பது நோயாளிகளுக்கு சுத்தமானதாகவும், உரிய தரத்திலும் பராமரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இங்கு கழிப்பறையின் தோற்றமும், சுத்தமற்ற தன்மையும் குறித்த வைத்தியசாலை நிர்வாகத்தினரின் நடவடிக்கை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |