தென்னிலங்கையில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் சுட்டுக்கொலை
தென்னிலங்கையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம், வீரகெட்டிய பிரதேசத்தில் இன்றிரவு (03.07.2023) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 38 வயதுடைய எஸ்.சஞ்சீவ என்ற நபரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் முச்சக்கரவண்டியில் தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது பிறிதொரு முச்சக்கரவண்டியில் வந்த இருவர், அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சடலத்தை வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |