ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வர் கட்சியிலிருந்து நீக்கம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வர் காமினி ஸ்ரீ ஆனந்த கட்சியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார்.
அவரை கட்சியின் தலைமை ஹம்பாந்தோட்டை நகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதன் மூலம், முதல்வர் பதவியில் இருந்தும் நீக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.
மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹம்பாந்தோட்டை நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவொன்றின் சார்பில் வேட்புமனுவை தாக்கல் செய்தமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரின் கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள மாநகர முதல்வர், தாம் விலக்கப்பட்டமைக்கான வர்த்தமானி வெளியிடப்படும் வரை முதல்வராக செயற்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தன்னிடம் விளக்கம் கேட்டதாகவும் ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ பதவியில் இருந்து
விலகியதை அடுத்து, காமினி ஸ்ரீ ஆனந்த, அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
