இலக்கு வைக்கப்பட்ட ஹமாஸ் தளங்கள்: முக்கிய நிதியாளர் பலி
இஸ்ரேலின் தாக்குதலானது காசா பகுதியில் வலுப்பெற்றுள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய நிதியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் நாசர் யாகூப் ஜாபர் என்ற நிதியாளர் கொல்லப்பட்டுள்ளார்.
இவர் ரபா நகரில் ஹமாஸ் அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கு வேண்டிய நிதியை அளித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் அதிரடி நடவடிக்கை
கடந்த டிசம்பரில் மாத்திரம் அவர், இலட்சக்கணக்கான டொலர்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே, வடக்கு காசாவின் ஷிஜெயா பகுதியில் இஸ்ரேல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் ஹமாஸ் அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் பயிற்சி மையம் ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், மத்திய காசா பகுதியில், ஹமாஸ் அமைப்பின் தளங்களை வான், தரை மற்றும் கடல்படை வழியே சென்று இஸ்ரேல் தாக்கியுள்ளது.
6 மாதங்களாக நடந்து வரும் மோதலில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, இஸ்ரேல் காசாவின் ரபா நகரில் போரை தீவிரப்படுத்தி உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |