பரீட்சை எழுத காத்திருந்த மாணவி கோடரி தாக்குதலில் பலி
பொலன்னறுவ, தம்பால பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், கோடரியால் தாக்கப்பட்ட நிலையில் சில நாட்களின் பின்னர் உயிரிழந்ததாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு க.பொத.த உயர்தரப் பரீட்சை எழுத காத்திருந்த தம்பல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாத்திமா நஷிமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி, அவர் பயிற்சி வகுப்பினை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கோடரியால் தாக்குதல்
அயல் வீட்டில் வசிக்கும் 26 வயது இளைஞர் ஒருவர் அவரை கோடரியால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயம் அடைந்த மாணவி பொலநறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan