காசா குறித்த ட்ரம்பின் அறிவிப்பு.. இந்திய - பாகிஸ்தானின் ஒருமித்த நிலைப்பாடு
புதிய இணைப்பு
காசாவில் மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது உட்பட, தனது அமைதித் திட்டத்தின் சில கூறுகளை ஹமாஸ் ஏற்றுக்கொண்ட பிறகு, நீடித்த அமைதிக்கு ஹமாஸ் தயாராக இருப்பதாக தான் நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில், காசாவில் அமைதியை முன்னேற்றுவதில் ட்ரம்பின் பங்களிப்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அதேவேளை, காசாவில் போர் தொடங்கியதிலிருந்து போர்நிறுத்தத்தை நோக்கிய மிக நெருக்கமான நடவடிக்கை இது என்று பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.
அமைதிக்கான வாய்ப்பு மீண்டும் மூடப்பட அனுமதிக்கப்படக்கூடாது என்றும் பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Alhamdolillah, we are closer to a ceasefire than we have been since this genocide was launched on the Palestinian people. Pakistan has always stood by the Palestinian people and shall always do so.
— Shehbaz Sharif (@CMShehbaz) October 4, 2025
Gratitude is due to President Trump, as well as to leaderships of Qatar, Saudia…
முதலாம் இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காசா பகுதிக்கான அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின் முதல் படிகளை ஏற்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, காசா பகுதியில் குண்டுவீச்சு நடத்துவதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டு ட்ரம்பின் அமைதி திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
ட்ரம்பின் எச்சரிக்கை
ட்ரம்ப், நேற்று (3) தனது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில், ஹமாஸ் தனது அமைதித் திட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமைக்குள் உடன்பட வேண்டும் என்று எச்சரித்திருந்தார்.
ட்ரம்பின் இந்தத் திட்டம் உடனடியாக சண்டையை நிறுத்துதல், ஹமாஸால் பிடிக்கப்பட்ட 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் இறந்ததாகக் கருதப்படும் பணயக்கைதிகளின் உடல்களை 72 மணி நேரத்திற்குள் ஒப்படைத்தல் ஆகியவற்றை முன்மொழிந்தது.
அதற்குப் பதிலாக, இஸ்ரேல் வைத்திருந்த நூற்றுக்கணக்கான காசாவாசிகள் பரிமாறிக்கொள்ளப்படவிருந்தனர்.
வலுவான நடவடிக்கைகள்
அந்த உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், ஹமாஸுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் மேலும் கூறியிருந்தார்.
அதன்படி, கிட்டத்தட்ட 2 வருட போரை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒக்டோபர் 7, 2023 அன்று நடந்த தாக்குதலில் பிடிபட்ட மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்ப ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
இருப்பினும், ட்ரம்பின் அமைதித் திட்டத்தில் ஹமாஸை ஆயுதக் களைதல் மற்றும் காசாவிலிருந்து வெளியேறுதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து ஹமாஸ் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
