வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற அரைமரதன் ஓட்டப்போட்டி
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது நேற்றையதினம்(06) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி குமுழமுனை மகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந்திருந்தது.
குறித்த வீதியோட்ட நிகழ்வானது16 வயது தொடக்கம் 20 வயது வரையுள்ள ஆண், பெண் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி இடம்பெற்றிருந்தது.
வெற்றிக்கேடயங்கள் மற்றும் பதக்கங்கள்
விசேடமாக மரதனோட்ட வீரர்களை வளப்படுத்தும் நோக்கோடும் சாதிக்க துடிக்கின்ற இளம் சாதனையாளர்களுக்கு சிறந்த களங்களை வழங்கும் நோக்கோடும் 14 மற்றும் 15 வயது பாடசாலை மாணவர்களுக்கான 5 கிலோமீட்டர் தூரத்தினை கொண்ட சிறிய வீதியோட்ட நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கான வெற்றிக்கேடயங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இலக்கையடைந்த அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 7 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
