சபையில் சால்வையணிந்து பலஸ்தீனத்திற்கு ஆதரவை வெளியிட்ட ஹக்கீம்
இஸ்ரேலின் (Israel) வான்வழித் தாக்குதல்களில் காசா முழுவதும் பல பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு நடக்கும் அநியாயத்தை கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சபையில் சால்வையணிந்து தனது ஆதரவை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வெளிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (21) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு ஆதரவை வெளிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் ரமழான் எனும் புனித மாதத்தை அமைதியான முறையில் அனுசரித்து வரும் நிலையில், இஸ்ரேல் காசாவில் உள்ள முஸ்லீம்களை நாளுக்கு நாள் கொன்று குவித்து வருகின்றது.
இந்த தாக்குதல்களின் பிரதான இலக்காக பெண்களும் குழந்தைகளுமே உள்ளனர். குறிப்பாக முஸ்லீம் இனத்தை முழுமையாக அழிப்பதே இவர்களுடைய பிரதான இலக்காக இருக்கின்றது என்று ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சில மேற்குலக நாடுகளும் முஸ்லீம் நாடுகளும் இதற்கு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. எனினும் காசாவில் இடம்பெறும் அட்டூழியங்கள் குறித்து இலங்கையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேலுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதோடு, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இன்னும் அமைதி காக்காது கண்டன அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் வவியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் News Lankasri
