நான் பதவி விலகவில்லை..! புத்திக மனதுங்க வெளியிட்டுள்ள தகவல்
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க, தான் பதவி விலகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் இடமாற்றம் கோரியதாகவும், ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது போல் பதவி விலகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெளியான செய்திகள்
இதன்போது, புத்திக மனதுங்க, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இடமாற்றம் கோரியதாக தெளிவுபடுத்தினார்.
மேலும், "நான் இடமாற்றத்திற்கான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளேன். தேசிய பொலிஸ் ஆணையம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளால் பொருத்தமான நியமனம் செய்யப்படும் வரை, நான் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம், பொலிஸ் செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க பதவி விலகியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 9 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
