தமிழ் மக்களை குழப்பும் ஹக்கீமின் அரசியல் நாடகம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
மாவீரர் நினைவேந்தல் விவகாரத்தை முன்வைத்து தமிழ் மக்களைக் குழப்பி அரசியல் இலாபம் தேடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றதாகவும், நினைவேந்தல்களை முன்னெடுக்க வேண்டாம் என அரசாங்கம் எவ்வித தடைகளையும் விதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், தலைவர்களின் படங்கள் மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புடைய அடையாளங்களைப் பயன்படுத்துவதற்கு சட்டரீதியான கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நினைவேந்தல் என்பது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தமது துயரத்தை நினைவுகூரும் உரிமை சார்ந்த விடயம் எனத் தெரிவித்த அவர், அதனை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ரவூப் ஹக்கீம் முன்வைத்த கருத்து அரசியல் இலாபத்தை நோக்கமாகக் கொண்டது என தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு நாமல் ராஜபக்ச வெளியிட்ட உருக்கமான சமூக ஊடகப் பதிவு அரசியல் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு விலை அதிகரிப்பை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் ரீதியான விமர்சனங்களை உருவாக்க சில தரப்பினர் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்ட உரை நிறைவடைந்த பின்னர் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டதை அரசாங்கத்தின் வரிச்சுமை மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுடன் தொடர்புபடுத்தி விமர்சனங்களை முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam