அநுர அரசுக்கு நாடாளுமன்றத்தில் பலமான ஆதரவு! வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு வெற்றி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (20.11.2026) மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது, வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வாக்கெடுப்பில் எவரும் வாக்களிப்பிலிருந்து விலகியிருக்கவில்லை.
வரவு - செலவுத் திட்டம்
இதற்கமைய, 97 மேலதிக வாக்குகளால் 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நிதி அமைச்சராக தனது பொறுப்பில், கடந்த நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதம் எனப்படும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்கள் நடைபெறவுள்ளது.

விவாதம் நிறைவடைந்த பின்னர், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும், சனிக்கிழமைகள் உட்பட, காலை 9.30 மணிக்கு வரவு செலவுத் திட்ட விவாதங்களுக்காக நாடாளுமன்றம் கூடவுள்ளது.
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam