2027 வரவு - செலவுத் திட்டத்திற்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்பு
2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கைத் தமிழரசு கட்சி முடிவு 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) தீர்மானித்துள்ளது.
இறுதித் தீர்மானம்
இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் இந்த முடிவை அறிவித்தார்.

கடந்த இரண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கும் தமது கட்சி ஆதரவு அளித்திருந்த போதிலும், 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அரசியல் சிக்கல்களையும் தீர்ப்பதில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்ததற்குக் எதிர்வினையாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.