இலங்கைக்குக் கிடைத்த ஹஜ் விசாக்கள் பல இலட்சங்களுக்கு விற்பனை : தடுப்பதற்கான அலுவலகம் திறப்பு!
இலங்கைக்குக் கிடைத்துள்ள ஹஜ் விசாக்களை பல இலட்சங்களுக்கு விற்பனை செய்து வருவதாகக் கிடைத்துள்ள முறைப்பாட்டின் பேரில் அதனைக் கண்காணிப்பதற்கு முதற்தடவையாக கொழும்பில் அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகம் நேற்றைய தினம் (21.03.2023) பௌத்த விவகார மதவிவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் விதுர விக்ரமநாய்கக இலங்கை முதற்தடவையாக ஹஜ் விவகாரங்களுக்காகத் திணைக்களத்தில் அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
3,500 விசாக்கள்
முஸ்லிம்களது ஐம்பெரும் கடமையான ஹஜ் பத்திரிகைக்காகக் கடந்த காலங்களில் முகவர்கள் ஊடாக பல்வேறு குளறுபடிகள் இருந்தன. இலங்கைக்குக் கிடைக்கும் விசாக்களை பல இலட்சங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டன அவ்வாறான குளறுபடிகளைத் தடுப்பதற்காகவே இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இம்முறை இலங்கை முஸ்லிம்களுக்காக 3,500 விசாக்கள் கிடைக்கும். என நம்புகின்றேன்..கடந்த 2 வருடங்களாக கொவிட் தொற்று காரணமாக ஹஜ் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
என அமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளார். அத்துடன் இச் நிகழ்வின்போது சவுதி அரேபியாவினால் இலங்கைக்கு வழங்கிய பேரித்தபழப் பொதியொன்றும் கெசல்வத்தை பள்ளிவாசல் தலைவரிடம் அமைச்சரினால் கையளிக்கப்பட்டது.
ஹஜ் குழுவின் உறுப்பினர்கள்
மேலும், இந்நிகழ்வினை முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களமும் ஹஜ் குழு மற்றும் ஹஜ்முகவர்கள் சங்கத்தின் தலைவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், முசாரப், மர்ஜான் பழீல் . இசாக் ரஹ்மான் , ஹஜ் குழுவின் தலைவர் இப்றாஹீம் அன்ஸார், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். பைசல் ஹஜ் குழுவின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
