ஹைட்டியில் தீவிபத்துக்குள்ளான படகு : 40 புலம்பெயர்ந்தோர் பலி
வடக்கு ஹைட்டியில் (Haiti) புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று தீ விபத்துக்குள்ளானதில் 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த படகானது, கேப் - ஹைடியனில் இருந்து 220 கிமீ (137 மைல்) தொலைவில் உள்ள டர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவுகளுக்கு பயணித்து கொண்டிருந்த போதே இவ்வாறு தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிர் பிழைத்த 41 பேரை ஹைய்டியன் கடலோர பொலிஸார் மீட்டுள்ளனர்.
பலர் காயம்
மேலும், 11 புலம்பெயர்ந்தோர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளை, படகில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அந்நாட்டு அதிகாரி ஒருவர், படகில் இருந்தவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றியிருந்ததன் காரணமாக பெட்ரோல் நிரப்பப்பட்ட கொள்கலனில் பட்டு தீப்பிடித்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
