நாடு முழுவதும் ஊரடங்கை அறிவிக்க தயாராகும் பங்களாதேஷ் அரசாங்கம்
பங்களாதேஷ் அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை விதிக்கவும் இராணுவத்தை நிலைநிறுத்தவும் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசாங்க வேலை ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் தலைமையிலான போராட்டங்கள் விரிவடைந்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போராட்டங்களில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று நள்ளிரவுடன் இரவு 105ஐ எட்டியதாக கூறப்படுகிறது.
30% அரசாங்க வேலை
எனினும், இது தொடர்பிலான சரியான தரவுகளை அரசாங்கம் வெளிப்படுத்த தவறிவருவதாக பங்களாதேஷின் அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற போராடியவர்களின் குடும்பங்களுக்கு 30% அரசாங்க வேலைகளை என்ற ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்புகள் தற்போது ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |