ஜனாதிபதி ஒதுக்கிய நிதி மக்கள் சேவைக்கே தவிர எம்.பிக்களின் சொந்த பாவனைக்கல்ல: எச்.எம்.எம். ஹாரீஸ்
ஜனாதிபதி ஒதுக்கிய நிதி மக்கள் சேவைக்கே தவிர எம்.பிக்களின் சொந்த பாவனைக்கல்ல என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள் பொறாமை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டில் ஒரு எதிர்க்கட்சியில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் நான்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அவசியத்தையும், வடகிழக்கு மக்களுக்கு தேவையான அபிவிருத்தி விடயங்களையும் ஜனாதிபதிக்கு விளக்கினேன்.
அவற்றை பற்றி உணர்ந்து கொண்ட ஜனாதிபதி மக்களுக்கு சேவை செய்ய எனக்கு நிதியினை வழங்கியிருக்கிறார்.
அதை கொண்டு பாடசாலைகள், பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்கள், பிரதேச உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறேன்.
இந்த நிதி எனது சொந்த தேவைகளுக்கு தரப்பட்டதல்ல. எனது பிரதேச அபிவிருத்தி பணிகளுக்கு தரப்பட்டவை. இதனைக் கண்டு பல அரசியல்வாதிகள் பொறாமை கொள்கிறார்கள்.
அத்துடன், எனக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள தொடர்பு என்ன என்று அரசியல்வாதிகள் சிலர் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |