மட்டக்களப்பில் வியாழேந்திரனின் நிகழ்வை புறக்கணித்த அரச உயர் அதிகாரிகள்
மட்டக்களப்பு - செங்கலடியில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கலந்து கொண்ட பிரதேச சபை மகளிர் தின நிகழ்வை செங்கலடி பிரதேச செயலாளர் உள்ளிட்ட சில திணைக்கள உயர் அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.
இது குறித்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கூறுகையில்,
பெரும்பான்மை அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் வரும் போது பின்னால் ஓடும் சில அரச அதிகாரிகள் செங்கலடி பிரதேசத்தில் பெண்களை கௌரவிக்கும் மகளிர் தின நிகழ்வை புறக்கணித்து விட்டு வேறு எங்கோ சென்றுள்ளனர்.
திணைக்கள உயர் அதிகாரிகள்
மண் மாபியாக்களுக்கும் பணக்கார வர்க்கத்திற்கும் ஓடி ஓடி பணியாற்றும் மேற்படி அதிகாரிகள் ஏழை மக்களுக்கு பணியாற்றாது அவர்களை ஏமாற்றி வருகின்றனர்.” என சாடியுள்ளார்.
மேலும், செங்கலடி - ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளே குறித்த நிகழ்வை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |