புதிய தமிழ்நாட்டு பா.ஜ.க வின் மாநிலத் தலைவருக்கு ஜி.வி.கே வாசன் வாழ்த்து
தமிழ்நாடு பா.ஜ.க வின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனுக்கு இந்திய அரசியல்வாதி ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதுவரை பா.ஜ.க வில் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் மிகச்சிறப்பாக பணியாற்றிய அண்ணாமலையை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை தமிழக பா.ஜ.க வின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏவை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
அரசியல் பணிகள்
அன்பாக பழகக்கூடியவர், பண்பாளர், திறமைமிக்கவர், கடின உழைப்பாளி. பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக மிகச்சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்.
தமிழ்நாடு பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவராக இயக்க வளர்ச்சிக்கும், தொகுதியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் உயர்வுக்கும் பாடுபடுபவர். மற்றும் பா.ஜ.க வை தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக்கிக் கொண்டிருக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்.
அந்த வகையில் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பா.ஜ.க வின் மாநிலத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இதுவரை தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பின் மூலம் பா.ஜ.க வினுடைய அடித்தள வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு, தொண்டர்களை தட்டி எழுப்பி, மிகச்சிறப்பாக பணியாற்றி விடை கொடுக்கும் தலைவர் அண்ணாமலையை பாராட்டி, வரும் காலங்களில் அவரது பணி இயக்கத்தில் சிறக்க வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
