வவுனியாவில் தனியார் காணி ஒன்றில் துப்பாக்கிகள் மீட்பு!
வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் இருந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இன்று (08) காலை குறித்த காணியில் அதன் உரிமையாளர்களால் அபிவிருத்தி பணிகளை செய்வதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் அகழப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தின் முகாம்
இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட இரண்டு ரி56 ரக துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படும் 450 ரவைகள் தென்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ஆயுதங்களைஅகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் முகாம் ஒன்று இயங்கியதுடன், அதற்கு அண்மித்த பகுதியில் யுத்த காலத்தில் புளொட் இயக்கத்தின் முகாம் அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொத்துக் கொத்தாக ஆடைகள் இன்றி புதைக்கப்பட்ட தமிழர்கள்: செம்மணி தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 19 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்து வெளிவந்த மாரீசன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
