கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு
கம்பஹா - கிரிந்திவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இன்று (08) மாலை 6.45 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவர் காயம்
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை குறிவைத்து தாக்கியுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் 30 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கட்டுகஸ்தர மற்றும் யக்கல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri