கொழும்பில் துப்பாக்கிச்சூடு! கைவிடப்பட்டிருந்த நிலையில் வாகனம் மீட்பு - தீவிர விசாரணை (Video)
கொழும்பு - அளுத்மாவத்தை பகுதியில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தில் வந்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
துப்பாக்கி சரியாக இயங்காத காரணத்தினால் இந்த துப்பாக்கிச்சூடு முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் சந்தேகநபர்கள் வாகனத்தை ஹிங்குருகொட சந்தியில் புதிய பாலத்தின் கீழ் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த வாகனத்தை கிராண்பாஸ் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், வாகனத்திலிருந்து டி56 துப்பாக்கியும், 9எம்எம் துப்பாகி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், முச்சக்கரவண்டியில் பயணித்தவர் இன்றைய தினம் வழக்கொன்றுக்காக செல்லவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
கொழும்பு - 15 முகத்துவாரம் பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
முச்சக்கரவண்டியொன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதியிலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








