யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே பிரச்சினை: சம்பவ இடத்தில் தோட்டாக்கள் மீட்பு (video)
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை பெரும் களேபரமாக மாறியுள்ளதுடன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்று (13.03.2023) பதிவாகியுள்ளது.
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் மயானம் ஒன்று புதிதாக அமைப்பதற்க்கு நாகர்கோவில் கிழக்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை
நாகர்கோவிலில் மயானம் ஒன்றின் மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(14.03.2023) நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுடன் தொடர்புடைய புலம்பெயர்வாசி ஒருவர் மீது நேற்று முன்தினம் (12.03.2023) தாக்குதல் நடத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகர்கோவில் பகுதிக்கு நேற்று (13.03.2023) பொலிஸார் விசாரணைக்குச் சென்றுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம்
அங்கு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களுடன் பொலிஸார் முரண்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முரண்பாடு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ள நிலையில் பொலிஸாரின் தாக்குதலில் பல பேர் காயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி தோட்டாக்கள் சம்பவ இடத்தில் இனங்காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி: தீபன்

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
