இலங்கையின் அரசியல் வாலாற்றில் ஆரி-சூரி சண்டையின் பின்னர் குணா- மகிந்தா சண்டை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ச மற்றும் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதலில் இரண்டாம் கட்டம் இந்த வாரத்தில் மீண்டும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக மோதலில் பாதிக்கப்பட்டு காயமடைந்தவரான குணதிலக்க ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் கவலை
இந்தநிலையில் அவரின் அறிக்கையின்போது, குற்றம் சுமத்தப்பட்டுள்ளவரான மகிந்தானந்த அளுத்கமகே தமது எதிர்க்கருத்துக்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாடாளுமன்றில் சண்டையின் இரண்டாம் பாகத்தை பார்க்கமுடியும் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அரசாங்கத்தின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் பின்னர், அளுத்கமகே தன்னைத் தாக்கியதாக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் ராஜபக்சவின் சட்டையை இழுத்ததாகவும் அவரைத் தாக்கவில்லை என்றும் மகிந்தானந்த கூறியுள்ளார்.
மேலும், சிதைந்து போன தனது பிம்பத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு கட்சி கடுமையாக முயற்சித்து வரும் நிலையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.
ஆரி-சூரி குத்துச்சண்டை
முன்னதாக 1977ஆம் ஆண்டு, அப்போதைய சுகாதார அமைச்சர் டபிள்யூ.பி.ஜி. ஆரியதாச மற்றும் கூட்டுறவு அமைச்சர் எஸ்.கே.கே. சூரியாராச்சி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பதிவாகியிருந்தது.
இது, அந்த காலப்பகுதியில் 'ஆரி-சூரி' குத்துச்சண்டைப் போட்டி என்று கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |