கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானியாவிற்கு இரகசியமாக தப்பிச்செல்ல முயன்ற இளம் பெண் கைது

CID - Sri Lanka Police Bandaranaike International Airport Trincomalee England
By Dhayani Jun 17, 2024 06:46 PM GMT
Report

பிரித்தானியாவிற்கு இரகசியமாக தப்பிச்செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த இளம் பெண் மற்றுமொரு நபருடன் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற போதே விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (06/15) 08.25 மணியளவில் தோஹா நோக்கிச் செல்வதற்காக கட்டார் எயார்வேஸ் விமானமான KR-655 இல் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்திய சிகிச்சையை பெறுமாறு அறிவுறுத்தல்

அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்திய சிகிச்சையை பெறுமாறு அறிவுறுத்தல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானியாவிற்கு இரகசியமாக தப்பிச்செல்ல முயன்ற இளம் பெண் கைது | Young Woman Who Secretly Went To England Is Wrong

விசாரணையில் வெளியான தகவல்

இதன்போது அனைத்து விமான அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு சேவை மையத்தில் கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை குறித்த இளம் பெண் சமர்ப்பித்துள்ளார்.

இதன்போது கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்தில் வித்தியாசம் காணப்பட்டமையினால் தலைமை குடிவரவு அதிகாரியிடம் விசாரணைக்கு அனுப்பி அனைத்து ஆவணங்களும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுள்ளன.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த பெண்ணின் கடவுச்சீட்டு போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானியாவிற்கு இரகசியமாக தப்பிச்செல்ல முயன்ற இளம் பெண் கைது | Young Woman Who Secretly Went To England Is Wrong

குடிவரவு அதிகாரிகளால் இருவர் கைது 

இதன்போது பிரித்தானிய கடவுச்சீட்டை வைத்திருந்த மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரும் பெண்ணுடன் விமான நிலையத்திற்கு வருகைத்தந்திருந்த நிலையில், அவர் குறித்த பெண்ணை பிரித்தானியாவிற்கு அழைத்துச் செல்வதற்கு தரகராகப் பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இருவரும் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக  கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏழு பேரின் உயிரை பறித்த கோர விபத்து: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஏழு பேரின் உயிரை பறித்த கோர விபத்து: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

குழப்பப்பட்டுள்ள சுமந்திரனின் பெரும் திட்டமிடல்

குழப்பப்பட்டுள்ள சுமந்திரனின் பெரும் திட்டமிடல்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US