அமெரிக்காவில் 12 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்: விபரீதமாக முடிந்த பனிப்பந்து விளையாட்டு
கார் ஒன்றின் மீது பனிப்பந்தை வீசியதற்காக 12 வயது சிறுவன் மீது துப்பாக்கிசூட்டு தாக்குதல் நடத்தப்பட்டு கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம், அமெரிக்காவின் கனெக்டிகட்டின் ஹார்ட்ஃபோர்ட் என்னும் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது, உயிரிழந்த சிறுவனும் 11 வயது மற்றைய சிறுவனும் பனிப்பந்துகளை வீசிக் கொண்டிருந்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதன்போது, ஒரு பனிப்பந்து கார் ஒன்றின் மீது வீழ்ந்துள்ள நிலையில், குறித்த கார் சாரதி, தடுப்பையும் மீறி சிறுவர்களை துரத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், 12 வயது சிறுவன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய சிறுவன் மீது எவ்வித தாக்குதலும் நடத்தப்படாத நிலையில் உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தாக்குதல் நடத்திய கார் தொடர்பிலும் தகவல்கள் எதுவும் தெரியவில்லை எனவும் அமெரிக்க பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
