இலங்கையை ஆட்டிப்படைக்கும் கொலைக்கலாசாரமும் குற்றச்செயல்களும்.. நாமல் வெளியிட்டுள்ள தகவல்
ஜனவரி முதல் பகல் நேர துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகளில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சர்ச்சைக்குரிய பொருட்களைக் கொண்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் ஜனவரி மாதம் எந்த ஆய்வும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவில் குறிப்பிட்டுள்ளார்.
கைதி விடுவிப்பு
"அரசாங்கம் பொறுப்பேற்க மறுக்கிறது. நிதி மோசடியில் ஈடுபட்ட ஒரு கைதி வெசாக் பண்டிகையின் போது ஜனாதிபதியின் பொது மன்னிப்புடன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், ஜனாதிபதி ஊடகம் இப்போது அதை மறுக்கிறது. கைதி எவ்வாறு விடுவிக்கப்பட்டார் என்பது குறித்து சிஐடி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
சிறை அதிகாரிகள் தாங்களாகவே செயல்பட்டார்கள் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இன்றைய சட்டம் ஒழுங்கு நிலை இதுதான்.
நல்லாட்சி மற்றும் வலுவான தலைமையைக் கேட்டு ஒவ்வொரு தருணத்திலும் எதிர்ப்புத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தி இன்று, வெறும் ஆறு மாதங்களுக்குப் பிறகு, நாட்டின் மீதான தனது பிடியை இழந்துவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri