தெஹிவளையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி
கொழும்பு- தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடானது தெஹிவளை-"A க்வாடஸ்" விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
இந்தநிலையில், மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
விசாரணை
இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையே காணப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.