இலங்கைக்கான மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்த வெளிநாடு..
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரைபிரித்தானிய அரசாங்கம் அதிகரித்துள்ளது.
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இதற்கு முன்னர் 675,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் மனிதாபிமான உதவியை வழங்குவதாக அறிவித்திருந்தது.
மனிதாபிமான உதவித் தொகை
பிரித்தானியாவால் வழங்கப்பட்ட அவசர அனர்த்த நிவாரணங்கள், அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, இலங்கைக்கு பல நாடுகள் உதவிகரம் நீட்டியுள்ளன.
பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்காக அமெரிக்கா இன்று இரண்டு விமானங்களை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,பிரான்ஸ், போலந்து, ஜெர்மனி மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு வருகைத்தற்து நாட்டிற்கு பொருத்தமான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
Bigg Boss: உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? மைக்கை மறைத்து பண்ணாதீங்கனு... கொந்தளித்த பிக்பாஸ் Manithan