நீண்ட நாட்களுக்கு பின்னர் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா! துள்ளிக்குதித்து கொண்டாடிய வீரர்கள் - இரசிகர்கள்..
இன்றைய ஒருநாள்(6) போட்டியில் இந்திய அணி நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்றுள்ளதை இந்திய அணியினர் உட்பட இரசிகர்களும் கொண்டாடிய காணொளி சமூக வலைத்தளத்தில் பரவலாகிவருகின்றது.
இந்திய அணியினர் தொடர்ந்து நாணயசுழற்சியில் தோல்வியடைந்து வருவது பேசுபொருளாகவிருந்தது.
நாணயசுழற்சியில் வெற்றி
அந்தவகையில், 20 சர்வதேச ஒருநாள் போட்டிக்கு பிறகு இந்திய அணி நாணயசுழற்சியில் வென்று சாதனை படைத்துள்ளது.
🚨 INDIA WON A TOSS IN ODI CRICKET. 🚨
— Cric Tikana (@bgt2027) December 6, 2025
- The celebration from captain KL Rahul. 🤣#indvssa #savsind #indvsa #savind #odiseries #Ashes #SyedMushtaqAliTrophy #ENGvAUS #AUSvENG pic.twitter.com/1VuwHz8guX
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2ஆவது ஆட்டத்தில் தென்ஆபிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
கொண்டாடிய இந்திய வீரர்கள்
இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. 20 சர்வதேச ஒருநாள் போட்டிக்கு பிறகு நாணயசுழற்சியில் வென்ற மகிழ்ச்சியில் கேஎல் ராகுல் சிரித்தப்படி அதனை கொண்டாடினார்.
Finally India has won the toss in ODI.
— chai (@chatstwts) December 6, 2025
A record has now been set, 20 ODI's toss losses in a row.
It a really a stats lore now, 1 in a million chance.
Look at the joy of the Indian bowling unit when the captain finally won the toss.#IndvsSA #IndianCricket #Cricket #ODIs pic.twitter.com/2uiiX6Pwzt
அதனை பார்த்த தென் ஆபிரிக்கா அணித்தலைவர் டெம்பா பவுமா சிரித்தப்படி நின்றார்.
மைதானத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த இந்திய வீரர்கள் ஹர்ஷித் ரானா துள்ளிக் குதித்து இதனை கொண்டாடினார்.அருகில் ரிஷப் பண்ட் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் அருகில் இருந்தனர்.
மேலும் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கலும் இதனை சிரித்தப்படி கொண்டாடினர்.
இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பேசுபோருளாகி வருகின்றது.
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri