கொழும்பில் துப்பாக்கிச் சூடு! பொலிஸார் தீவிர விசாரணை (Video)
கொழும்பு- கொட்டாஞ்சேனை பரமாநந்த விகாரமாவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் ஒருவர் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 40வயது மதிக்கதக்க ஒருவரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
இன்று (18.3.2023) இரவு இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகமூடி அணிந்த இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர், முச்சக்கர வண்டி நிலையம் ஒன்றில் இருந்த போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல்:- சிவா மயூரி


15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri