தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை! சிங்கள இளைஞர்களுக்கு யாழில் இருந்து எச்சரிக்கை
இலங்கையில், அண்மை காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவங்கள், யுத்தகால யாழ்ப்பாணத்தை மீண்டுமொரு முறை ஞாபகப்படுத்துவதாக சட்டத்தரணி உமாகரன் ராசையா தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இவ்வாறு நீதிமன்றத்திற்குள்ளேயே துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றமையானது, தெற்கின் கையாளாகாத தனத்தை எடுத்துக்காட்டுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாக சிறும்பான்மையினத்தவர்களை ஒடுக்கிய பேரினவாதிகளுக்கு எதிராக தற்போது அதே பயங்கரவாத தடைச்சட்டம் திரும்பியுள்ளது.
இதனால் அப்பாவியான சிங்கள் இளைஞர்களும் கைது செய்யப்படலாம்” என்றார். இது தொடர்பான விரிவான விளக்கங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |