தாயின் வீட்டுக்கு சென்று திரும்பிய பெண் சுட்டுக்கொலை
பொலன்னறுவையில் நேற்று (15.06.2023) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதிரிகிரிய - மிரிசேன கடற்றொழிலாளர் கிராமப் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 36 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தனது தாயாரின் வீட்டில் இருந்து தனது வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வீட்டின் மலசலகூடத்திற்கு அருகில் மறைந்திருந்த நபரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

அதன் பின்னர் குறித்த நபர் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த பெண் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பெண்ணுடன் இரகசிய தொடர்பு வைத்திருந்த நபருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தலைமறைவான சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam