மேற்கு லண்டனில் பயங்கரம்! துப்பாக்கி சூட்டில் சிறுமி உட்பட இருவர் காயம்
பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் (West London) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 வயது சிறுமி ஒருவரும் 34 வயதுடைய ஆணொருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில், 22 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு நேற்றையதினம் (25.11.2024) மாலை செல்சி (Chelsea) நகரின் லாட்பிரோக் குரோவ் வீதியில் (Ladbroke Grove) இருந்த வாகனமொன்றின் மீது நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, படுகாயமடைந்த இருவரும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது நிலையான நிலையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் கோரிக்கை
அத்துடன், துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட வாகனத்தில் 32 வயது பெண் ஒருவரும் இரண்டு வயது குழந்தையும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர்கள் இருவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த குற்ற சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு லண்டன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |