கொழும்பில் துப்பாக்கி சூடு: மர்ம நபர்களின் அட்டகாசம்
கொழும்பு, மோதர பொலிஸ் பிரிவில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 14, மஹவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் மோதர வீதி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளராக பணியாற்றி வருகின்றார்.
துப்பாக்கிப் பிரயோகம்
உணவகத்தின் வாயிலுக்கு அருகில் இருந்த போது, காரில் வந்த இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 12 மணி நேரம் முன்
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam