கொழும்பிலுள்ள பாடசாலை மீது துப்பாக்கி பிரயோகம் - பின்னணி குறித்து பொலிஸார் தகவல்
கொழும்பு, கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மால் மாவத்தையில் அமைந்துள்ள இசைப் பாடசாலை மற்றும் அதன் பிரதான வாயில் குறிவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி நடிகரின் மகனுக்குச் சொந்தமானதாக கூறப்படும் கட்டடத்திற்கு அருகில் அமைந்துள்ள இரவு விடுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொலைக்காட்சி நடிகர் தற்போது உயிரிழந்துவிட்டார். மேலும் இரவு விடுதியின் உரிமையாளரான அவரது மகன் பாதாள உலகத்துடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
பாதாள உலகக் குழு
அவர் டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகி உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு நவம்பர் 7 ஆம் திகதி, ஒரு பாதாள உலகக் குழு இரவு விடுதிக்குள் நுழைந்து தீ வைத்தது அழித்தது. மேலும் இந்த சம்பவத்தில் பலர் தீக்காயமடைந்தனர்.
கடந்த ஆண்டு நடந்த தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பு நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு
தற்போதைய துப்பாக்கிச் சூடு தொடர்பாக, இசைப் பாடசாலை கட்டடத்தைச் சுற்றி சுமார் 15T.56 தானியங்கி துப்பாக்கி தோட்டாக்களை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொலைக்காட்சி நடிகரின் மகனுக்கு எதிரான பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர் இசைப் பாடசாலையை இரவு விடுதி என்று தவறாகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam