கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் வைத்தியசாலையில் (Video)
இரண்டாம் இணைப்பு
கிம்புல - எலே பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்ற பாதாள உலக குற்றவாளி மீது துப்பாக்கி பிரயோக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தொரியவந்துள்ளது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்த நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த நபரின் வயிற்றில் துப்பாக்கி சூடு ஏற்பட்டள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - புதுச்செட்டியார் தெரு பகுதியில் துப்பாக்கி பிரயோக சம்பவமொன்று சற்றுமுன் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.







