சோமாவதி வனாந்திரத்தினுள் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு
சோமாவதி தேசிய வனாந்திரத்தினுள் புதைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சோமாவதி வனாந்திரத்தின் தொலைதூரப் பகுதியில் மரமொன்றின் அடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த டி-56 ரக துப்பாக்கியை கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸார் மீட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவின் 5ம் பிரிவு புலனாய்வு பொலிஸ் குழுவினர் இன்று (24) விசேட நடவடிக்கையொன்றின் மூலம் குறித்த துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
தனிப்பட்ட தகவல் வழங்குனர் ஒருவரிடமிருந்து பொலிஸ் குழுவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இருப்பினும் இந்த துப்பாக்கியின் உண்மையான உரிமையாளர் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

அண்மையில் வெலிகந்த பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்களை கூர்மையான ஆயுதத்தால் தாக்க முயன்றபோது பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் குறித்த துப்பாக்கியின் சொந்தக்காரராக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri