பிறக்கும்போதே கின்னஸ் உலக சாதனை பெற்ற இரட்டைக் குழந்தைகள்!

Government of Canada Canada
By Chandramathi Mar 07, 2023 10:17 PM GMT
Report

ஆகக் குறைந்த நாட்களில் பிறந்த இரட்டையர்கள் என்ற கின்னஸ் உலக சாதனையுடன் கனேடிய இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் வாழும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கெவின் நடராஜா மற்றும் ஷகினா ராஜேந்திரம் தம்பதிகளுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளே இந்த சாதனயை படைத்துள்ளனர்.

கின்னஸ் உலக சாதனை

கரு முழுமையாக முதிர்ச்சி அடையாமல் 22 வாரங்களிலேயே அதாவது கருவுற்று 126 நாட்களில் பிறந்து, ஏடியா நடராஜாவும் ஏட்ரியல் நடராஜாவும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

பிறக்கும்போதே கின்னஸ் உலக சாதனை பெற்ற இரட்டைக் குழந்தைகள்! | Guinness Record Twins Babies World Most In Canada

பொதுவாக, முழுமையான கர்ப்ப காலம் 40 வாரங்களாகும். குழந்தைகள் இருவரும் 126 நாள்களுக்கு முன்னதாகவே, 2022 மார்ச் 4-ஆம் திகதி பிறந்துள்ளனர்.

22 வாரங்களுக்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே குழந்தைகள் பிறந்திருந்தால், மருத்துவமனையால் உயிர்காக்கும் முயற்சி நடந்திருக்காது என்று கின்னஸ் கூறுகிறது.

மருத்துவ சிகிச்சை

குழந்தைகளின் தாய் இது தொடர்பில் கூறுகையில், தனக்கு 21 வாரங்கள் மற்றும் ஐந்து நாட்களில் பிரசவம் தொடங்கியபோது, ​​குழந்தைகள் காப்பாற்றப்பட சாத்தியம் இல்லை என்றும் "உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் 0 சதவீதம்" இருப்பதாகவும் மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

கடுமையான இரத்தப்போக்கு இருந்தபோதும், இன்னும் சில மணி நேரத்திற்கு குழந்தைகளை வயிற்றினுள்ளேயே வைத்திருக்க தம்மாலான முழு முயற்சியை செய்ததாக அவர் கூறினார்.

பிறக்கும்போதே கின்னஸ் உலக சாதனை பெற்ற இரட்டைக் குழந்தைகள்! | Guinness Record Twins Babies World Most In Canada

அதனையடுத்து, 22 வாரங்களுக்கு இரண்டு மணி நேரம் பிந்தி குழந்தைகள் தாயின் கருவைவிட்டு வெளியில் வந்துள்ளன.

தொடக்கத்தில் கடுமையான மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாகவும் ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த நிலைமை மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த இரட்டையர்கள் சமீபத்தில் தங்கள் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.    

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US