யாழில் 106 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு அறுதி உறுதிப்பத்திரம் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (09.02.2024) காலை10 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
வீடமைப்பு கடன்
இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட காசோலையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப
தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)
கே.ஸ்ரீமோகனன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர்
எம்.ரவீந்திரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும்
பயனாளிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 10 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri