50 ஆயிரம் குடியிருப்புகளுக்கு உறுதிப்பத்திரம்: முற்றிலும் பொய் என்கிறார் மரிக்கார்

Colombo Ranil Wickremesinghe Saidulla Marikkar
By Dharu Nov 29, 2023 11:45 PM GMT
Report

கொழும்பு மாவட்டத்தில் 50 ஆயிரம் குடியிருப்புகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள விடயம் முற்றிலும் பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் கொழும்பில் 14,512 குடியிருப்புகள் மாத்திரமே உள்ளன. சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோருக்காகவே இந்த பொய்யான வாக்குறுதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (29.11.2023) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகிய அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு: மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்

காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு: மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்

வீட்டு உறுதிப்பத்திரம்

அவர் மேலும் உரையாற்றியதாவது, “2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பல கற்பனை கதைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் உள்ள 50 ஆயிரம் குடியிருப்பாளர்களுக்கு வீட்டு உறுதிப்பத்திரம் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

50 ஆயிரம் குடியிருப்புகளுக்கு உறுதிப்பத்திரம்: முற்றிலும் பொய் என்கிறார் மரிக்கார் | Guarantee For 50 Thousand Flats

இது முற்றிலும் பொய்யானது.தனது சகாக்களுக்காக வழங்கப்பட்டுள்ள அரசியல் வாக்குறுதி. நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 50 ஆயிரம் வீடுகள் இல்லை.

14512 வீடுகள் மாத்திரமே உள்ளன.மீதுன்செவன குடியிருப்புத் திட்டத்தில் 500 குடியிருப்புகளும், லக்முது செவன குடியிருப்பு திட்டத்தில் 118 குடியிருப்புகளும், மெதத்செவன குடியிருப்புத் திட்டத்தில் 430 குடியிருப்புகளும் உள்ளடங்களாக 24 குடியிருப்பு செயற்திட்டத்தில் 14512 குடியிருப்புகள் உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ வழங்கியுள்ள குடியிருப்புகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்க முடியாது,ஏனெனில் உரிய காணிகளுக்கு முதல் உரிமையாளர் இல்லாத நிலையில் உறுதிப்பத்திரம் வழங்க முடியாது.

இதுவே உண்மை. 50 ஆயிரம் பேருக்கு வீட்டு உறுதிப்பத்திரம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டவுடன் மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு தொகுதிக்கு சென்றேன்.

அப்பகுதியில் உள்ளவர்கள் சுமார் 30 வருடகாலமாக வாடகை மற்றும் வரி செலுத்தி உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

விடுதலை புலிகள் தலைவரின் மனைவியை சூழ்ந்து வந்த ஆபத்துக்கள்(Video)

விடுதலை புலிகள் தலைவரின் மனைவியை சூழ்ந்து வந்த ஆபத்துக்கள்(Video)

பொய்யான வாக்குறுதி

ஒருசிலர் இரண்டாம் தர உரிமையாளர்களாக உள்ளார்கள். புதிய குடியிருப்பு தொகுதிகளை நிர்மாணிப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஆனால் கொழும்பு மாவட்டத்தில் பெருமளவான வீட்டுதொகுதி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆகவே ஜனாதிபதியின் வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.

50 ஆயிரம் குடியிருப்புகளுக்கு உறுதிப்பத்திரம்: முற்றிலும் பொய் என்கிறார் மரிக்கார் | Guarantee For 50 Thousand Flats

கற்பனை கதைகளை அழகாக குறிப்பிடுவதில் ஜனாதிபதி திறமையானவர் என்பதை பொதுஜன பெரமுனவினர் அறியாமல் இருக்கலாம், நாங்கள் நன்கு அறிவோம்.

கொழும்பு மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 14,512 குடியிருப்புகளில் பதிவு செய்யப்பட்ட 12,360 பேருக்கு குடியிருப்பு உறுதிப்பத்திரம் வழங்குவதாக இருந்தால் அதற்கு இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்குவோம்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு எம்மை காட்டிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே கடன்பட்டுள்ளார்.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை தொடர்ந்து அவர் ஏமாற்றினார். அதற்கான பாடத்தை கொழும்பு மாவட்ட மக்கள் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கற்பித்தார்கள்.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு 50 ஆயிரம் பேருக்கு குடியிருப்பு உரிமை வழங்குவதாக பொய்யான வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சாகல ரத்நாயக்க,ரவி கருணாநாயக்க ஆகியோர் முடிந்தால் எம்முடன் போட்டி போட்டு தேர்தலில் வெற்றியடையட்டும் என்றார்.

துவாரகாவின் காணொளி தொடர்பில் இலங்கை இராணுவ தரப்பு வெளியிட்டுள்ள தகவல்

துவாரகாவின் காணொளி தொடர்பில் இலங்கை இராணுவ தரப்பு வெளியிட்டுள்ள தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை, சங்கத்தானை

26 Aug, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US