மிகப்பெரிய இழப்பினை சந்திக்கும் அபாயம்! இலங்கைக்கு வந்த கடிதம்
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் விதிகள் காரணமாக, ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகைகளை இலங்கை இழக்கும் அபாயம் உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் (பிரிட்டன்) ஆகிய நாடுகள் தங்கள் கவலைகளை பல்வேறு இராஜதந்திர தரப்புக்கள் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவையின் துணை நிர்வாக இயக்குனர் பாவ்லா பாம்பலோனி, புதிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த கவலைகளை வெளிப்படுத்தி இங்குள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவலறிந்த வட்டம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,