நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் எடுத்துள்ள தீர்மானம்
நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் நாளை (10.08.2026) மற்றும் நாளை மறுதினம் (11.08.2026) சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளனர்.
பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
கொடுப்பனவு உயர்த்தப்படவில்லை
அவர் மேலும் தெரிவிக்கையில், கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபா பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை.

2024ஆம் ஆண்டில், குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.
இருப்பினும், இதுவரை அக்கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) சுகயீன விடுமுறை அறிவித்து பணிக்குச் சமூகமளிக்காது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri