நாட்டில் அதிகரித்து வரும் கைதிகளின் எண்ணிக்கை
நாட்டில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை புள்ளிவிபரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்றைய தினம் வரையில் மொத்தமாக 22666 கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை கைதிகள்
இதில் 8285 பேர் கைதிகள் எனவும், 14381 பேர் சந்தேக நபர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சந்தேக நபர்கள் சிறையில் தடுத்து வைக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 3 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
