வவுனியாவில் பாடசாலை மாணவன் மீது கடும் தாக்குதல்
வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில் மாணவன் ஒருவர் மீது இரும்பு பொல்லுகளால் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்ட நிலையில், படுகாயமடைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் (29.05.2023) மாலை குறித்த மாணவன் பள்ளிவாசலில் தொளுகையினை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மற்றொரு இளைஞர் குறித்த மாணவன் மீது இரும்பு மற்றும் பொல்லுகளால் சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
படுகாயமடைந்த மாணவன்
தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் சு. சுகைர் அகமட் என்ற 18 வயதான மாணவனே காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |