களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயது மாணவி மாயம்
களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயது மாணவி காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவி நேற்று முன்தினம் முதல் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கற்கைநெறியை தொடரும் மாணவி
அவர் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவி நேற்று முன்தினம் ஆங்கில வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறியதாகவும், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை எனவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொலைபேசி
இதேவேளை மாணவியின் கையடக்க தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக (Switch Off) தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போனதாக தெரிவிக்கப்படும் மாணவி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறாத நிலையில் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |