திருகோணமலையில் கைக்குண்டுகள் மீட்பு
திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரீன் வீதியில் பிளாஸ்டிக் கேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைக்குண்டுகள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து இன்று (30) மாலை கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை நீதிமன்றத்தில் காணி தொடர்பில் அதிக அளவில் வழக்குகள் பேசக்கூடிய சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்கு முன்னால் இந்த குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
ஆனாலும் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பிளாஸ்டிக் அந்த இடத்தில் இருந்ததாகவும் அந்த கேனை நாய் கடித்துக் குதறிய நிலையில் அதனுள் காணப்பட்ட கைக்குண்டுகள் வெளியே வீசப்பட்டதாகவும் இதனை அடுத்து வீதியால் சென்ற சிலர் வழங்கிய தகவலை அடுத்து இந்த குண்டு மீட்கப்பட்டதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருகோணமலை நகர சபையின் சுத்திகரிப்பு தொழிலாளிகள் அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தும் போது பிளாஸ்டிக் கேன் இருப்பதை அவதானித்த போதிலும், குறித்த பிளாஸ்டிக் கேனை காலால் உதைத்து விட்டு குப்பையை மாத்திரம் சுத்தப்படுத்தும் காட்சி சிசிடி காணொளி மூலம் கண்டறியப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதிலும் இந்த கைக்குண்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீதிமன்ற அனுமதியைப் பெற்றவுடன் கைக்குண்டை செயலிழக்கச் செய்ய உள்ளதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவ இடத்திற்கு சென்று திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் துறைமுக பொலிஸார் இணைந்து விசாரணைகளை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.









நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
